சாய்பாபா கோயில் பூமிபூஜை!
ADDED :4395 days ago
ராஜபாளையம்: அய்யனார்கோயில் ரோட்டில், ஷீரடி சாய்பாபா கோயில் கட்ட, பூமிபூஜை நடந்தது. காலை மஹா கணபதி ஹோமத்துடன் பூஜை துவங்கியது. ஷீரடியில் இருந்து கொண்டு வரப்பட்ட முழுமுதற்கல் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூமிபூஜை நடந்தது. சாய்பாபா பிரார்த்தனா சமாஜை சேர்ந்த ஆச்சார்யா சுவாமிகள் நடத்தினார்.சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, அன்னதானம் நடந்தது. 54 சென்ட்டில் கோயில் அமைய உள்ளது. ஏற்பாடுகளை, ஷீரடி சாய்சேவா சமிதியினர் செய்திருந்தனர்.