உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கோயிலில் பால் உற்பத்தி உயர்வு!

திருவண்ணாமலை கோயிலில் பால் உற்பத்தி உயர்வு!

திருவண்ணாமலை:  அருணாசலேஸ்வரர் கோயில் பசுக்களின் பராமரிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, பசுக்களின் பால் உற்பத்தி 3 மடங்காக உயர்ந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயில் கோசாலையில் உள்ள பசுக்கள், முறையாகப் பராமரிக்கப் படுவதில்லை. போதிய தீவனம் இல்லாமல் பசுக்களும், கன்றுகளும் உடல் மெலிந்து காணப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு அண்மையில் எழுந்தது.  இதையடுத்து அதிகாரிகள் தொடர் ஆய்வில் ஈடுபட்டனர். கோசாலையைப் பராமரிக்க கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். பசுக்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதால் அவற்றில் பால் உற்பத்தி 3 மடங்காக உயர்ந்துள்ளது. இதற்கு பசுக்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டு, உரிய தீவனம் வழங்கப்படுவதே காரணம் என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, இதேபோன்று பசுக்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !