நோன்பின்போது கையில் கயிறு கட்டிக்கொள்வதன் நோக்கம் என்ன?
ADDED :4368 days ago
கையில் கட்டும் கயிறுக்கு ரக்ஷா பந்தனம் அல்லது காப்பு என்று பெயர். நோன்பு இருக்கும்போது நம்மை எல்லா வகையிலும் காப்பாற்றுவது என்பது இதன் பொருள். சிலருக்கு உடல் நலக்குறைவால் நோன்பைத் தொடரமுடியாமல் போகலாம். காப்பு கட்டி நம்பிக்கையுடன் இருந்தால் இதுபோன்ற தொந்தரவுகள் வராது. மேலும் பங்காளி உறவுமுறையின் பிறப்பு, இறப்பு, தீண்டல் நேரிட்டால்கூட, காப்புக்கட்டிக் கொள்பவர்களுக்கு தீண்டல் தடை கிடையாது. நோன்பை தொடர்ந்து முடித்து இறையருள் பெறலாம்.