சபரிமலையில் சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைக்காக நடை திறப்பு!
ADDED :4391 days ago
சபரிமலை : சபரிமலையில் சித்திரை திருநாள் ஆட்டத்திருநாள் பூஜைகள் நடைபெற் உள்ளது. மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மன்னர் சபரிமலைக்காக பல்வேறு பணிகளை செய்துள்ளார். மண்டல பூஜை நாளில் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்கும் 426 பவுன் தங்க அங்கி சித்திரை நாள் மன்னர் காணிக்கையாக வழங்கியதாகும் அவரது பிறந்த நாளையொட்டி ஒரு நாள் சபரிமலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அவரது பிறந்த நாள் ஐப்பசி மாதம் சித்திரை நட்சத்திர தினத்தன்று கொண்டாடப் படுகிறது. இதற்காக சபரிமலை நடை நவ 1ம் தேதி திறக்கப்பட்டு நவ 2 ல் நடை அடைக்கப்படுகிறது.