திருப்பதி தேவஸ்தானம் கோவையில் பஜனோத்சவம்
ADDED :4391 days ago
கோவை : கோவையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், பஜனோத்சவம் நடந்தது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் சப்தகிரி,விஸ்ருதி, அனிருத்தா ஆகிய மூன்று பஜனை மண்டலிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மண்டலிகள் சார்பில் AU 31 கோவை சலிவன் வீதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண மண்டபத்தில், கடந்த நான்கு நாட்களாக தர்மபிரசார நிகழ்ச்சி நடந்தது. இதில், திருமலை திருப்பதி தேவஸ்தான சொற்பொழிவாளர் ஆனந்த தீர்த்தசாரியார், ஸ்ரீலஷ்மி சோபன பாராயண சொற்பொழிவு நிகழ்த்தினார். கடந்த மூன்று நாட்களாக நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சி AU 31 நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில், ஆந்திர மாநிலம், கர்னூல் உத்திராஜ மடத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மகாலட்சுமி விக்ரகம் புஷ்ப அலங்காரம் செய்யப் பட்டது. சொற்பொழிவு மற்றும் பஜனோத்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.