பழநி கந்தசஷ்டி விழாவிற்காக மலையேறிய கஸ்தூரி!
பழநியில் கந்தசஷ்டி விழா துவக்கம்: பழநி மலைக்கோவிலில், காப்புகட்டுதலுடன் கந்தசஷ்டி விழா, நேற்று துவங்கி யது.பழநி கோவிலில், நவ.,3ம்தேதி முதல், 9ம்தேதி வரை, கந்தசஷ்டி விழா நடக்கிறது.இதையடுத்து, நேற்று பகல், 12:00 மணிக்கு, உச்சிகால வேளையில், மூலவர் ஞானதண்டாயுதபாணி, உற்சவர் சின்னக்குமாரசுவாமி, சண்முகர், நவவீரர்களுக்கு காப்புகட்டுதல் நடந்தது.மாலையில், தங்க சப்பரத்தில், சின்னக்குமாரசுவாமி வீதியுலா நடந்தது
மலையேறிய கஸ்தூரி: பழநி கந்தசஷ்டி விழாவிற்காக, கோயில் யானை "கஸ்தூரி யானைப்பாதை வழியாக மலைக்கோயில் சென்றது. அங்கு ஆறு நாட்கள் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறது. ஆண்டு முழுவதும் பெரியநாயகியம்மன் கோயிலில் உள்ள யானை கஸ்தூரி, கந்த சஷ்டி விழாவிற்கு மட்டுமே, மலைக்கோயிலுக்கு அழைத்து செல்லப்படுகிறது. நேற்று காலை 8மணிக்குமேல், யானைப் பாதை வழியாக மலையேறிய கஸ்தூரி, பத்மாசூரனை சின்னக்குமாரசுவாமி வதம் செய்யும் வரை, மலைக்கோயிலில் ஆறுநாட்கள் தங்கி, பக்தர்களுக்கு ஆசி வழங்க உள்ளது.