ராமேஸ்வரம் கடலில் புனித நீராடிய பக்தர்கள்!
ADDED :4562 days ago
ராமேஸ்வரம்: ஐப்பசி அமாவாசையை ஒட்டி, நேற்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி, சாமி தரிசனம் செய்தனர். ஐப்பசி அமாவாசை தினமான நேற்று, ராமேஸ்வரத்திற்கு வேன், கார், பஸ்சில் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இவர்கள், நேற்று காலை அக்னி தீர்த்த கடற்கரையில், முன்னோர்களுக்கு திதி கொடுத்து, கடலில் நீராடினர். பின், கோயிலில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். தீபாவளி முடிந்து மறுநாளும் "லீவு என்பதால், சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகமாக காணப்பட்டது.