ராஜராஜசோழனின் 1028-வது ஆண்டு சதயவிழா: தஞ்சை பெரியகோவிலில் தொடங்குகிறது.
ADDED :4398 days ago
இந்த ஆண்டிற்கான முதலாம் ராஜராஜசோழனின் பிறந்தநாளை அவர் பிறந்த ஐப்பசி சதயவிழா வருகிற 10-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்குகிறது. 9.30 மணிக்கு தஞ்சை அரண்மனை தேவஸ்தான வார வழிபாட்டு மன்ற மாணவர்களின் திருமுறை அரங்கம் நடக்கிறது. காலை 9.45 மணிக்கு மேடை நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் தலைமை தாங்குகிறார். அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபோன்ஸ்லே முன்னிலை வகிக்கிறார். சதயவிழாக்குழு தலைவர் கு.தங்கமுத்து வரவேற்று பேசுகிறார்.