ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் தீபாவளி சிறப்பு வழிபாடு
ADDED :4398 days ago
ஆலங்குடி: ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோவிலில் நேற்று தீபாவளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை கலங்காமல் காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், குரு தெட்சிணாமூர்த்தி, வள்ளி, தெய்வானை சுப்பிரமணியர், மகாலெட்சுமி, துர்க்கையம்மன், நவக்கிரகங்கள், சனீஸ்வர பகவான் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிசேகம், ஆராதனைகள் செய்யப்பட்டது. அதிகாலை முதல் திரளான பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.