வேலூர் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது
வேலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. ஜலகண்டேஸ்வரர் கோவில்: வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தினமும் சண்முகருக்கு அபிஷேக, ஆராதனை நடக்கிறது.சூரசம்ஹாரம் 8–ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
பாலமுருகன் கோவில்: வேலூரை அடுத்த ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோவிவில் கந்தசஷ்டி விழா தொடங்கியதையொட்டி வருகிற 8–ந் தேதி வரை தினமும் காலை 9–30 மணி மற்றும் மாலை 5 மணிக்கு வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.
பழனி ஆண்டவர் கோவில்: வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் 33–ம் ஆண்டு கந்தசஷ்டி விழா தொடங்கியது. தினமும் பழனி ஆண்டவருக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. 8–ந் தேதி இரவு தெய்வானை முருகன் திருக்கல்யாணம் நடக்கிறது.