உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சியில் கந்த சஷ்டி விழா துவக்கம்

செஞ்சியில் கந்த சஷ்டி விழா துவக்கம்

செஞ்சி: செஞ்சி சுந்தர விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று துவங்கியது. செஞ்சி கிருஷ்ணாபுரம் சுந்தர விநாயகர் கோவிலில் உள்ள முருக பெருமா னுக்கு 32 வது ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நேற்று துவங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக திருமுருகன் தோற்றம் நேற்று நடந்தது.இன்று தந்தைக்கு உபதேசமும், 6ம் தேதி தாருகன் வதமும், 7ம் தேதி சிங்கமுகன் வதமும், 8ம் தேதி வேல் வாங்கும் நிகழ்ச்சி, 9ம் தேதி காலை 10 மணிக்கு 108 சங்காபிஷேகம், மாலை 6 மணிக்கு சூரசம்ஹார பெரு விழா, 10ம் தேதி இரவு 7 மணிக்கு திருக் கல்யாண உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் செங்குந்த மரபினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !