வலம்புரி சங்குக்கு தீபாராதனை உற்சவம்
ADDED :4394 days ago
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த வன்னிப்பேர் முத்துமாரியம்மன் கோவில் மண்டலாபிஷேக விழாவில் வலம்புரி சங்கு அபிஷேகம் நடந்தது. திண்டிவனம் அருகே உள்ள வன்னிப்பேர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவிலில், கும்பாபிஷேக மண்டலாபிஷேக விழா மற்றும் 108 வலம்புரி சங்கு அபிஷேக விழா நடந்தது. நேற்று முன்தினம் காலை 6.00 மணி முதல் 7.00 மணிவரை மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 4.00 மணிக்கு சிறப்பு தீபாரா தனை, 5.00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கியது. 6.00 மணிக்கு பூர்ணாஹூதி நடந்தது. கடம் புறப்பாடு துவங்கி, கோவிலில் வலம் வந்தது. பின், முருக்கேரி ஸ்ரீலஸ்ரீ சீனுவாசசாமி, நாகராஜ்சாமிகள் மூலம் 108 வலம்புரி சங்கால் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.