சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பழநி கோயிலில் சுவாமி தரிசனம்!
ADDED :4390 days ago
பழநி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம், குடும்பத்தினருடன், பழநிகோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பழநிக்கு வந்த அவரை, திண்டுக்கல் மாவட்ட நீதிபதி பாலசுந்தரக்குமார், கலெக்டர் வெங்கடாசலம், ஜெயச்சந்திரன் எஸ்.பி., கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம் ஆகியோர் வரவேற்றனர். அவருக்கு, போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் பங்கேற்று, தனது பெயர் மற்றும் குடும்பத்தினரின் பெயருக்கு அர்ச்சனை செய்தார். பின்னர், பகல் 2.30 க்கு கார் மூலம் ஈரோடுக்கு பறப்பட்டார்.