உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றத்து கோயிலில் யாகசாலை பூஜை!

குன்றத்து கோயிலில் யாகசாலை பூஜை!

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டியை முன்னிட்டு நவ., 8 வரை தினமும் காலை 8.30 மணிக்கும் மாலை  மணிக்கும் விசாக கொறடு மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் நடக்கிறது. கோயிலில் சஷ்டி, கார்த்திகை தீபம், தை தெப்பம், பங்குனி திருவிழாக்களில் தினமும் யாகசாலை பூஜைகள் நடக்கும். சஷ்டி திருவிழாவில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு தினம் காலையில் மட்டும், மற்ற மூன்று திருவிழாக்களில் சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகைக்கும் தினமும் இரண்டு வேளைகள் யாகசாலை பூஜைகள் நடக்கும். சஷ்டியை முன்னிட்டு, நவ., 3முதல் யாகசாலையில் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்குடம், வள்ளி, தெய்வானைக்கு வெள்ளி குடங்கள், பரிவார மூர்த்திகளுக்கு வெள்ளி சொம்புகளில் புனித நீர் நிரப்பி வைக்கப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, கும்ப பூஜை முடிந்து தீபாராதனைகள் நடக்கிறது. நவ., 8 காலையில் சண்முகருக்கு தங்க குடத்தில் புனிதநீரால் அபிஷேகம் செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !