உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

சென்னிமலை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

சென்னிமலை: சென்னிமலை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, 7ம் தேதி நடக்கிறது. இதற்காக, கம்பம் நடப்பட்டு, கம்பத்துக்கு பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். சென்னிமலை, காங்கேயம் மெயின் ரோட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. இம்மாரியம்மனுக்கு, ஆண்டு தோறும் ஐப்பசி, 15 நாள் பொங்கல் திருவிழா கொண்டாடப்படும். இந்தாண்டு பொங்கல் விழா, கடந்த, 23ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 30ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. அது முதல் தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கம்பத்துக்கு பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு நடத்துகின்றனர். இன்று (6ம் தேதி) மாவிளக்கு ஊர்வலமும், சிறப்பு பூஜையும் நடக்கிறது. 7ம் தேதி பொங்கல் விழா நடக்கிறது. அன்று காலை முதல் பொங்கல் வைத்து பெண்கள் வழிபடுவர். 8ம் தேதி மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !