உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமி விவேகானந்தர் ரத யாத்திரைக்கு சிறப்பான வரவேற்பு!

சுவாமி விவேகானந்தர் ரத யாத்திரைக்கு சிறப்பான வரவேற்பு!

சங்கராபுரம்: சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு உலா வரும் ரத யாத்திரைக்கு நேற்று முன்தினம் மாலை சங்கராபுரம் எல்லையான ஆற்றுப்பாலம் அருகில் வரவேற்பு அளிக்கப்பட்டது.கடைவீதி விநாயகர் கோவில் அருகில் பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பொது மக்கள் தரிசனத்திற்கு 10 நிமிடம் யாத்திரை வாகனம் நிறுத்தப்பட்டது. ஒன்றிய சேர்மன் அரசு, பேரூராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வணிகர் பேரவை மாவட்ட பொரு ளாளர் முத்துகருப்பன், வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ், துணை தலைவர் நாராயணன், வைத்திலிங்கம், பாலு, குசேலன், ரோட்டரி தலைவர் குணசேகரன், அரிமா சங்க தலைவர் அஸ்மதுல்லா, இன்னர்வீல் கிளப் தலைவி தீபா, நெல் அரிசி ஆலை உரிமையாளர் சங்க தலைவர் வேலு, நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் சீனிவாசன், டாக்டர் கோவிந்தராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி: அம்பேத்கர் சிலை அருகே ரத யாத்திரைக்கு பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. எம்.எல்.ஏ., அழகுவேலு பாபு விவேகானந்தர் சிலைக்கு மாலையணிவித்தார். ஆர்.டி.ஓ., ராஜசேகர் வரவேற்றார். சேர்மன்கள் பாலகிருஷ்ணன், ராஜசேகர் கொடியசைத்து ரத ஊர்வலத்தை துவக்கினர். அ.தி.மு.க., நகர செயலாளர் பாபு, ஒன்றிய துணை சேர்மன் கண்ணன், டி.எஸ்.எம்., கல்லூரி செயலாளர் அசோக்குமார், நகர காங்., தலைவர் தனபால், ரோட்டரி, லயன்ஸ் சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். ராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் ஆசியுரை வழங்கினார். விவேகானந்தர் 150வது ஆண்டு விழாக்குழு மாநில செயலாளர் குமாரசாமி சிறப்புரையாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !