இனிய தருனங்களை அசை போடுங்க!
ADDED :4355 days ago
பக்கத்து வீட்டில் கார் வாங்கி விட்டால், அடுத்த வீட்டுக்காரரும் வாங்க ஆசைப்படுகிறார். எதிர்வீட்டுப் பெண் கட்டியிருக்கும் பட்டும், நகையும் மனதைச் சுண்டி இழுக்கிறது. இவர்களைப் போல பணமும், புகழும் எனக்கு இல்லையே! என்று பல சமயத்தில் பணக்காரர்களைப் பார்த்து ஏங்குகிறான் மனிதன். இப்படி எப்போதும் அடுத்தவர்களோடு ஒப்பிட்டால், பொறாமையும், தாழ்வு மனப்பான்மையுமே மனதில் படரும். உங்களது நல்ல நிலையை எண்ணிப் பாருங்கள். இன்றிருக்கும் நிலைக்கு நன்றி செலுத்துங்கள், என்கிறார் ஒரு அறிஞர். வாழ்வின் நல்ல நிகழ்வுகளை, இனிய தருணங்களை மட்டுமே மனிதன் அசைபோடவேண்டும். இந்த ரசனை மூலம் வாழ்வு இனிக்கும்.