உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை மகர விளக்கு: ரயில்கள் செங்கனூரில் நிற்கும்!

சபரிமலை மகர விளக்கு: ரயில்கள் செங்கனூரில் நிற்கும்!

சபரிமலை: மண்டல, மகர விளக்கு திருவிழாவுக்காக செங்கனூர் ரயில் நிலையத்தில் 4 ரயில்கள் 2 நிமிடங்கள் நின்று செல்லும் என தென்னக ரயில்வே செய்திகுறிப்பு கூறியுள்ளது. இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்ககையில், அதன்படி, திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (12698), நவம்பர் 16, 23, 30 டிசம்பர் 7,, 14, 21, 28, ஜனவரி 4, 11, 18 ஆகிய தேதிகளில் செங்கனூர் ரயில் நிலையத்துக்கு இரவு 10.13 மணிக்கு வந்து 10.15 மணிக்குப் புறப்படும். அதுபோல, சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (12697) நவம்பர் 17, 24 டிசம்பர் 1, 8, 15, 22, 29 ஜனவரி 5,12, 19 ஆகிய தேதிகளில் செங்கனூர் ரயில் நிலையத்துக்கு காலை 3.58 மணிக்கு வந்து, காலை 4 மணிக்குப் புறப்படும். கொச்சுவேலி - பாவ்நகர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (19259) நவம்பர் 14, 21, 28, டிசம்பர் 5, 12, 19, 26 ஜனவரி 2, 9, 16 ஆகிய தேதிகளில் செங்கனூர் ரயில் நிலையத்துக்கு மாலை 5.30 மணிக்கு வந்து, மாலை 5.32 மணிக்குப் புறப்பட்டுச் செல்லு<ம். பாவ்நகர் - கொச்சுவேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (19260) நவம்பர் 17, 24, டிசம்பர் 1, 8, 15, 22, 29, ஜனவரி 5, 12, 19 ஆகிய தேதிகளில் செங்கனூர் ரயில் நிலையத்துக்கு நள்ளிரவு 12 மணிக்கு வந்து 12.02 மணிக்குப் புறப்படும் என்று அந்த செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !