உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கார்த்திகை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் லட்ச தீபம்!

திருக்கார்த்திகை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் லட்ச தீபம்!

மதுரை: மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் கார்த்திகைத் திருவிழா வரும் 12-ம் தேதி முதல் நவ. 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. நவ. 17-ம் தேதி திருக்கார்த்திகை தினத்தன்று கோயில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படும். அன்றைய தினம் இரவு 7 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி, கீழமாசி வீதி சென்று அம்மன் தேரடி அருகிலும், சுவாமி சன்னதி தேரடி அருகில் பூக்கடை தெருவிலும் சொக்கப்பன் நிகழ்ச்சிக்கு எழுந்தருளி, இந்த இடங்களில் சொக்கப்பனை ஏற்றப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !