வைத்தீஸ்வரன் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு!
ADDED :4322 days ago
ஓமலூர் பேரூராட்சி அக்ரஹாரம் பகுதியில் தைலாம்பிகை சமேத வைத்தீஸ்வரன் கோயில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கந்த சஷ்டி தொடக்க விழாவினையொட்டி, கோயிலில் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இந்ந நிலையில், திங்கள்கிழமை கோயில் தர்மகர்த்தா ராமநாதன் கோயிலைத் திறக்கச் சென்றார். அப்போது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது, பழைமை வாய்ந்த ஐம்பொன் சிலைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. விநாயகர், நடராஜர் மற்றும் முருகன் சிலைகள் என திருட்டுப் போன சிலைகளின் மதிப்பு ரூ.2.5 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.