திருப்பரங்குன்றம் கோயிலில் வேல் வாங்குதல்
ADDED :4322 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில், கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, நாளை(நவ., 8) நடக்கும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காக, இன்று(நவ.,7) மாலை 6.30 மணிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. சத்திய கிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாளுடன் சர்வஅலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளுவார். அம்பாள் கரத்திலுள்ள நவரத்ன வேல் பெறப்பட்டு, சுவாமி கரத்தில் சாத்துப்படி செய்யப்படும். நவ., 10 -19 வரை கார்த்திகை தீபத் திருவிழா நடக்கிறது. இந்நாட்களில், சுவாமி இரவு வீதி உலா இருப்பதால், நவ., 19 வரை தங்க ரதம் புறப்பாடு இல்லை.