உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமூர்த்தி பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத்தடை

திருமூர்த்தி பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கத்தடை

உடுமலை: திருமூர்த்திமலை கோவில் பஞ்சலிங்க அருவியில், நேற்று முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் ஆங்காங்கே பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் அமராவதி அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு, 1, 014 கன அடியாகவும், திருமூர்த்தி அணைக்கு, வினாடிக்கு 857 கன அடியாகவும் அதிகரித்துள்ளது. இதனால், திருமூர்த்திமலை கோவில் பஞ்சலிங்க அருவியில், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், நேற்று முதல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை மற்றும் அறநிலையத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அறநிலையத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !