கம்பம் பகவதியம்மன் கோயில் திருவிழா
கம்பம் : கம்பம் பகவதியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டி பந்தயம், இன்னிசை கச்சேரி, முளைப்பாரி ஊர்வலம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கம்பம் ஒக்கலிகர் (காப்பு) சமுதாயத்தின் சார்பில்,பகவதியம்மன் கோயில் திருவிழா கொண்டாடப்பட்டது. துவக்க விழா நிகழ்ச்சிக்கு சமுதாய நாட்டாண்மை பார்த்திபன் தலைமை வகித்தார். நந்தகோபாலன் கோயில் வளாகத்தில் மதுரை அபர்ணா ஈவின்ஸ் குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. மஞ்சள் நீராட்டம், சுவாமி அழைப்பு, மாவிளக்கு எடுக்கப்பட்டது. சுவாமி அழைப்பின் போது, நையாண்டி மேளம், கேரள ஜெண்டை மேளம், பேண்டு வாத்தியம், தப்புசெட் மேளம், கேரள பூ காவடி, வாண வேடிக்கை என சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கம்பமெட்டு ரோட்டில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பெரிய மாடு, பூஞ்சிட்டு, தட்டான், நடுமாடு என பல பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.தொடர்ந்து நேற்று பிற்பகல் வண்டி வேஷம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை மேற்குத் தெரு விழாக்குழுவினர் செய்திருந்தனர்.