ஊட்டி சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா
ADDED :4458 days ago
ஊட்டி :ஊட்டி சுப்ரமணிய சுவாமி கோவிலில் வரும் 9ம் தேதி திருக்கல்யாண உற்சவ விழா நடக்கிறது. ஊட்டி லோயர் பஜார் பகுதியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் உற்சவத்தில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில் சிறப்பு அபிஷேகம், ஹோமம், வழிபாடு, ஆராதனை ஆகியவை நடந்தன. 2ம் நாள் விழாவில் தர்மசாஸ்தா பஜனை சபையினரின் உற்சவம் நடந்தது. தொடர்ந்து பல்வேறு உபயதாரர்களின் உற்சவ விழா நடந்து வருகிறது. வரும் 9ம் தேதி காலை 10:35 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மாலை 4:45 மணிக்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது. 10ம் தேதி மாலை 6:05 மணிக்கு விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.