உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில்களில் திருவிழா துவக்கம்

மாரியம்மன் கோவில்களில் திருவிழா துவக்கம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில்களில், திருவிழா துவங்கியது. திருச்செங்கோடு பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன் கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட மாரியம்மன் கோவில்களில், திருவிழா, நேற்று பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கோவில்களில் வைக்கப்பட்ட கம்பம் மற்றும் கும்பங்களுக்கு, பெண்கள் அதிகாலை முதலே புனிதநீர் ஊற்றி வழிபாடு செய்தனர். திருவிழாவை முன்னிட்டு, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நவம்பர், 15ம் தேதி, பொங்கல் வைத்தல், மாவிளக்கு, ஸ்வாமி வீதி உலா, அக்னிசட்டி எடுத்தல், அலகு குத்துதல், ஆடுபுலி ஆட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் நிகழ்ச்சிகள் நடக்கிறது. நவம்பர், 16ம் தேதி, கம்பம் எடுக்கப்பட்டு, தெப்பக் குளத்தில் விடும் விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !