உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகேந்திர சுவாமிகள் கோவிலில் நாக சதுர்த்தி விழா

நாகேந்திர சுவாமிகள் கோவிலில் நாக சதுர்த்தி விழா

கடம்பத்துார் : அகரம் கிராமத்தில், 31ம் ஆண்டு, நாக சதுர்த்தி விழா, நடந்தது. கடம்பத்துார் அருகே, அகரம் கிராமத்தில் அமைந்துள்ள நாகேந்திர சுவாமிகள் கோவிலில், ஆண்டுதோறும் நாக சதுர்த்தி விழா நடந்து வருகிறது.இதே போல், இந்த ஆண்டு, 31ம் ஆண்டு நாக சதுர்த்தி விழா, நேற்று நடந்தது. காலை, 6:00 மணி முதல், 7:30 மணிக்குள், நாகேந்திர சுவாமிகள் கோவிலில் உள்ள மூலவருக்கு, சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !