உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சத்தியமங்கலம் அருகில் உள்ள வரம்பாளையம் தோப்பூர் காலனியில் பிரசித்தி பெற்ற பட்டத்தரசி அம்மன்  கோவிலில்  நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.  நேற்று காலை 8.30 மணிக்கு யாத்ராதானம், யாகசாலையில் இருந்து தீர்த்தக்குடங்களுடன் புறப்படுதல் ஆகிய நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முதலில் விநாயகருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பட்டத்தரசி அம்மன், அண்ணமார் சுவாமி, மதுரைவீரன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.  கும்பாபிஷேக விழாவையொட்டி, கோவிலின் முன் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !