உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி கோயிலில் நவ.12 முதல் கார்த்திகை உற்சவம்!

மதுரை மீனாட்சி கோயிலில் நவ.12 முதல் கார்த்திகை உற்சவம்!

மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் கார்த்திகை உற்சவம் 12.11.2013 முதல் 21.11.2013 வரை நடைபெறுகிறது. உற்சவம் நடைபெறும் 10 நாள்களிலும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் ஆடிவீதிகளில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.  வரும் 17ஆம் தேதி (ஞாயிறு) திருக்கார்த்திகை அன்று திருக்கோயில் முழுதும் லட்சதீபம் ஏற்றப்படும். அன்று இரவு 7 மணிக்கு அருள்மிகு சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி, கீழமாசி வீதி செல்வார். மேலும் அம்மன் தேரடி அருகிலும், சுவாமி சன்னதி அருகிலும், பூக்கடைத் தெருவிலும் சொக்கப்பன் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். சுவாமி முன்னிலையில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !