கோயிலில் தரிசனம் செய்த பிறகு பிராகாரம் சுற்றலாமா?
ADDED :4449 days ago
ஆலயம் முழுவதுமே பரம்பொருளின் ஆற்றல் நிறைந்திருப்பதாக ஆகமங்கள் கூறுகின்றன. இவற்றில் எட்டு இடங்களில் இறை சக்தி அதிகமாக உணரலாம் என்று கூறி நாம் ஆலயம் செல்லும்போது இவ்வெட்டு இடங்களையும், இறை சக்தியின் ஊற்றுகளையும் கண்டிப்பாக, வரிசையாக தரிசனம் செய்யவேண்டும் என பணித்திருக்கிறது. கோபுரம், விமானம், த்வாரம், பிராகாரம், பலிபீடம், அர்ச்சகர், மூலவர் மற்றும் சண்டேசர் ஆகியவைதான் இந்த எட்டு. இவற்றை தரிசனம் செய்வது நமக்கு மிக உயர்ந்த பலன்களை அளிக்கும். எனவே, தாங்கள் பிராகாரத்தில் உள்ள அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு முடிந்த முடிவாகிய பரம்பொருளை கடைசியில் வழிபட்டுவிட்டு, சிவபக்தர்களில் முதல்வரான சண்டேசரிடத்தில் வழிபாட்டினை முடித்தல் வேண்டும்.