ஆறுமுக சுவாமி கோவிலில் சகஸ்ரநாம அர்ச்சனை
ADDED :4351 days ago
மீஞ்சூர்: ஆறுமுக சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, சகஸ்ர நாம அர்ச்சனை, நடைபெற்றது.மீஞ்சூர், காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பர நாதர் கோவிலில் உள்ள, ஆறுமுக சுவாமி சன்னிதியில், கந்த சஷ்டியை முன்னிட்டு, நேற்று சகஸ்ர நாம அர்ச்சனை நடைபெற்றது. பின்னர், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், மீஞ்சூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.