வெள்ளையூர் கோவில் சீரமைக்கஅறநிலையத் துறை நிதியுதவி
ADDED :4351 days ago
உளுந்தூர்பேட்டை: வெள்ளையூரில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த வரதராஜ பெருமாள் கோவில் சீரமைப்பு பணிக்கு அறநிலையத் துறை நிதியுதவி வழங்கியது.உளுந்தூர்பேட்டை அடுத்த வெள்ளையூரில் நூற்றாண்டு பெருமை கொண்ட வரதராஜ பெருமாள் கோவில் உள் ளது. பழமை வாய்ந்த இக்கோவிலை சீரமைக்க அறநிலையத்துறை சார்பில் ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராமசாமியிடம் வழங்கினார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அன்பழகன், தெய்வீகன் மற்றும் குணசேகரன், நெடுமாறன், கருணாநிதி, ராமகிருஷ்ணன் உடனிருந்தனர்.