காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சூரசம்ஹார விழா
ADDED :4406 days ago
ஆட்டையாம்பட்டி: சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், நேற்று சூரசம்ஹார விழா நடந்தது. சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, ஸ்வாமிக்கு காப்பு கட்டு நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று மாலை, 4 மணிக்கு கோவில் பரம்பரை அறங்காவலர் மற்றும் பூசாரியுமான செல்வகுமார் முன்னிலையில், முருகனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. ஆட்டையாம்பட்டி, காளிப்பட்டி, மல்லசமுத்திரம், மங்களம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.