உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பெரம்பலூர்: பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியஸ்வாமி கோவிலில், கந்த சஷ்டி விழாவும், திருக்கல்யாண உற்சவமும் கோலாகலமாக நடந்தது. பெரம்பலூரில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சுப்ரமணியஸ்வாமி சன்னதியில், நகர நகை வியாபாரிகள் சங்கம், நகர விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம் சார்பில், 36வது ஆண்டு கந்த சஷ்டி விழா நடந்தது. சஷ்டி அன்று கோனேரிப்பாளையம் ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் பால்காவடி, பால்குடம் எடுத்து, ஊர்வலமாக பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். பின்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. இரவு சூரசம்கார நிகழ்ச்சியும், சுப்ரமணியனசுவாமி, வள்ளி தெய்வானை திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.இதை முன்னிட்டு மதனகோபாலசுவாமி கோவிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வரப்பட்டது. அதைத்தொடர்ந்து திருக்கல்யாண உற்சவத்தை திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார், பெரம்பலூர் சஞ்சீவிராவ் மற்றும் குழுவினர் நடத்தி வைத்தனர்.கோவில் நிர்வாக அலுவலர் ராஜேந்திரன், மாவட்டத்தலைவர் ராஜேந்திரன், மாநில பிரதிநிதி கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் முத்துவீரன், புன்னகை மன்ற தலைவர் ராஜசேகரன், நகர பொருளாளர் ரெங்கராஜன், ஓய்வுபெற்ற டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் கணபதி, விஸ்கர்ம இளைஞர் நற்பணி மன்றத்தலைவர் முத்து, சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !