மங்களகணபதி கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4461 days ago
ஈரோடு: ஈரோட்டை அடுத்த, 46 புதூர் கிராமம், ஸ்ரீ செந்தூர் கார்டனில் மங்களகணபதி கோவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக பூஜைகள், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. பின், யாக பூஜைகள் தொடர்ந்து நடந்தது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.தொடர்ந்து அலங்காரம், கோ பூஜை, தீபாராதனைகள் நடந்தது. விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.