பெருமாள் கோவிலில் ஆழ்வார்கள் உற்சவம்
ADDED :4460 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ஆழ்வார்கள் உற்சவம் நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீகவள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் உற்சவம் நேற்று இரவு 7 மணிக்கு நடந்தது. முன்னதாக மாலையில் பெருமாள், தாயார், உபநாச்சியார், ஆழ்வாராதிகள் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்கார திருமஞ்சனம் செய்து வைக்கப்பட்டது. சிறப்பு அலங்காரங்களுக்கு பின் மண்டபத்தில் பெருமாள் தாயார் மற்றும் ஆழ்வார்களுக்கு சேவை சாற்றுமுறை ஆராதனம் நடந்தது. தேசிய பட்டர், வழிபாட்டினை செய்து வைத்தார்.