சுப்ரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம்
ADDED :4461 days ago
விழுப்புரம்: விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் ஸ்ரீ வள்ளி, தெய்வாணை சுப்பிரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. கந்தசஷ்டியை முன்னிட்டு விழுப்புரம் ஸ்ரீகைலாசநாதர் கோவிலில் அமைந்துள்ள சுப்பிரமணியர் சுவாமிக்கு கடந்த ஏழு தினங்களாக காலை, மாலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இறுதி நாளான நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. முன்னதாக, உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், மாங்கல்ய சரடு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வைத்தியநாத சிவாச்சாரியார், கணேசன், தியாகேசன் ஆகியோர் செய்திருந்தனர்.