கட்டாரிமங்கலம் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம்
ADDED :4348 days ago
பேய்க்குளம்: பேய்க்குளம் அருகே கட்டாரிமங்கலம் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் நடந்தது. பேய்க்குளம் அருகே கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் நடந்தது. காலையில் சிவகாமி அம்பாளுக்கு காப்புக்கட்டி சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இரவில் வீரபாண்டீஸ்வரர் சிவகாமி அம்மாள் முன்பு காட்சி தந்தார். சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் நலுங்கு நிகழ்ச்சி நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பக்தர்கள் சுவாமி, அம்பாளுக்கு மொய் பணம் அளித்தனர். இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கட்டாரிமங்கலம் பஞ்.தலைவர் கனகராஜ் , கோவில் தர்மகர்த்தா நடராஜமுருகன், மாணிக்கராஜ், பாலமுருகன், குமார், முருகன்ஆகியோர் செய்திருந்தனர்.