ராமேஸ்வரத்தில் மழை வேண்டி வருண ஜபஹோமம்!
ADDED :4354 days ago
ராமேஸ்வரம்: மழை வேண்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் வருண ஜப ஹோமம் செய்து, பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தினர். பிராமணர் சங்கம் சார்பில், சீதாராம் தாஸ் பாபா தலைமையில், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில், மங்கள வாத்தியம் முழங்க வேத விற்பன்னர்கள் கணபதி ஹோமம், கோ பூஜை, நவக்ரஹ ஹோமம், வாஸ்து ஹோமம், வருணஜப ஹோமம் செய்தனர். தொடர்ந்து, அக்னி தீர்த்த கடலில், நகராட்சி தலைவர் அர்ச்சுணன், யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன், பா.ஜ., நிர்வாகி சுந்தரம், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மற்றும் பொதுமக்கள் பலர் மலரஞ்சலி செலுத்தி, மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.