உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., வடபத்ரசாயி கோயிலில் பாலாலய பூஜை துவக்கம்!

ஸ்ரீவி., வடபத்ரசாயி கோயிலில் பாலாலய பூஜை துவக்கம்!

ஸ்ரீவில்லிபுத்தூர்: வடபத்ரசாயி கோயிலில், பாலாலயம் நடப்பதையொட்டி, நேற்று பூஜைகள் துவங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், வடபத்ரசாயி கோயில்களில் கும்பாபிஷேகம் பணிகள், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் துவங்கி நடந்து வருகிறது. இதற்காக, ராஜகோபுரத்தில் பெயின்ட் அடிக்கும் பணியும், கடந்த சில மாதங்களுக்கு முன் நிறைவு பெற்றது. இந்நிலையில், வடபத்ரசாயி கோயிலில் பாலாலயம் நாளை(நவ.,15) நடக்க உள்ளது. இதற்காக நேற்று யாக பூஜை துவங்கியது. ராம்கோ சேர்மன் ராமசுப்பிரமணியராஜா, தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் சுப்பிரமணியன் கலந்து கொண்டனர். மழை வேண்டி சிறப்பு பூஜை தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில், மழை வேண்டி வருண பகவான்,சுவாமி மற்றும் அம்பாளுக்கு, சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. கோயில் பரம்பரை அறங்காவலர் துரைராஜசேகர் தலைமையில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !