மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
4317 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
4317 days ago
திருவண்ணாமலை: இத்தாலி நாட்டை சேர்ந்த சிவலோக பக்தர்கள், மஹா தீபம் ஏற்ற நெய் காணிக்கை செலுத்தினர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழாவில் மஹா தீப திருவிழாவினை காண பல்வேறு பகுதியிலிருந்து, 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள். இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில், பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மஹா தீபம் ஏற்ற, 3,500 கிலோ நெய்யை வேலூர் ஆவின் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர். இந்நிலையில், இத்தாலி நாட்டை சேர்ந்த சிவலோக ஆன்மிக ஆஸ்ரமத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலிற்கு சென்று காணிக்கை நெய் காணிக்கையை கோவில், இணை ஆணையர் திருமகளிடம் கொடுத்தனர். பின்னர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில் ஆறாம் நாளான நேற்று, 63 நாயன்மார்களை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தோளில் சுமர்ந்துப்படி "அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி கோஷத்துடன் மாட வீதி உலா வந்தனர்.
4317 days ago
4317 days ago