உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் திருவாடுதுறை ஆதீனம் கோவில் கும்பாபிஷேகம்!

சிதம்பரம் திருவாடுதுறை ஆதீனம் கோவில் கும்பாபிஷேகம்!

சிதம்பரம்: சிதம்பரம் மாலைக்கட்டி தெரு திருவாடுத்துறை ஆதீனம் மடம் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவாடுத்துறை ஆதீனத்திற்கு சொந்தமான சிதம்பரம் மாலைக்கட்டி தெரு கிளை மடம் சிவகாமியம்மை சமேத நடராஜர் மற்றும் மெய்கண்டதேவநாயனார் திருக்கோவில் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திருவாடுதுறை ஆதீனம் குரு மகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார்  சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. யாகசாலையில் பல்வேறு ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இரண்டு கால யாகசாலை பூஜை, பூர்ணாகிதி, மகா தீபாராதனைகள் நடந்தது. காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடு செய்து 10 மணிக்கு கோவில் விமானம், மூலவர் விமானம் ஆகியவைக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து மகா தீபாராதனைகள் நடந்தது. இதில் திருவாடுதுறை ஆதீனம் குரு மகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார்  சுவாமிகள், கட்டளை தம்பிரான்கள் திருவெண்ணைநல்லூர் அம்பலவாண சுவாமிகள், சுப்ரமணியன் சுவாமிகள், மவுன மடம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் முருகானந்தம், தருமபுரம் மற்றும் திருப்பனந்தாள் கட்டளை தம்பிரான்கள் சிதம்பரம் இந்து முன்னணி நிர்வாகிகள், நகர முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !