உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குறைந்த ஊதியத்தில் தத்தளிக்கும் கோயில் பணியாளர்கள்!

குறைந்த ஊதியத்தில் தத்தளிக்கும் கோயில் பணியாளர்கள்!

திற்பரப்பு: குமரி மாவட்ட திருக்கோயில் பணியாளர்களின் அவலநிலைக்கு தீர்வுகாண அரசுநடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனும் கோரிக்கை வலுத்து வருகிறது. ஆன்மிக திருத்தலங்களுக்கு பிரசித்திபெற்ற குமரி மாவட்டத்தில் பழம்பெரும் திருக்கோயில்கள் பல உள்ளன. மன்னர் காலத்தில் பெருமையுடன் பராமரிக்கப்பட்டு வந்த திருக்கோயில்கள், திருக்கோயில் நிர்வாகத்தின் பொறுப்பில் வந்தபின், பராமரிப்பில் குறைபாடுகள் ஏற்பட துவங்கின. ஒரு கட்டத்தில் பெரும்பாலான திருக்கோயில்கள்கேட்பாரற்றுபோகும் நிலைக்கு தள்ளப்பட்டது. பொதுமக்களின் முயற்சியாலும், அரசின் நடவடிக்கையாலும், தற்போது திருக்கோயில்கள் பல புனரமைக்கப்பட்டு வருகின்றன. குமரி மாவட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள்மேற்கொண்டு சீரமைக்க நிர்வாகம் முயற்சிகள்மேற்கொண்டு வருகிறது. அரசுபல முயற்சிகள் எடுத்துவரும் நிலையில், மாவட்ட திருக்கோயில் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மிகவும் மெத்தனமாகவே உள்ளதாக பக்தர்கள் குறை கூறுகின்றனர். குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலானகோயில்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை மற்றும் தனிப்பெருமையுடன் அமைந்துள்ளன. இதனை வெளிப்படுத்தி, அதிக பக்தர்களை ஈர்க்க திருக்கோயில் நிர்வாகம் நடவடிக்கைமேற்கொள்ளாதது பெரும் குறையாகவே உள்ளது. குமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் சுமார் 490கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் பணிபுரியும் பணியாளர்களின் நிலை மிகவும் பரிதாபமாகவே உள்ளது.போதிய பணியாளர்கள் இல்லாமலும், இருக்கும் குறைவான பணியாளர்களில் பெரும்பாலானோர் ஆண்டுக்கணக்கில் தினக்கூலி, என்.எம்.ஆர்., அடிப்படையிலேயேவேலை öசுய்து வருகின்றனர்.

இவர்களுக்கு தினமும் 40 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. பல ஆண்டுகளாக பணி நிரந்தரத்தை எதிர்பார்த்திருக்கும் பணியாளர்கள் இதனால் விரக்தியில் உள்ளனர்.கோயிலின் அமைதியான சூழலுக்கு ஊழியர்களின் ஒத்துழைப்பும்தேவைப்படும் பட்சுத்தில், தமிழக அரசுஇதுபோன்றகோயில் ஊழியர்களின் விஷயத்தில் அலட்சியம் காட்டுவது பக்தர்கள் இடையே அதிருப்தியையும், ஊழியர்கள் இடையே கடும்வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பா.ஜ., அறநிலையத்துறை பிரிவு மாவட்ட தலைவர் ராமச்சுந்திரன் கூறியதாவது: குமரி மாவட்டம் ஆன்மிக பெருமை நிறைந்த மாவட்டமாகும். ஆனால், திருக்கோயில்களின் நிலையோ மிகவும்மோசுமாக உள்ளது.கோயில்களில் நிர்வாக ரீதியாக பல குறைபாடுகள் உள்ளன. அறங்காவலர் குழு இல்லாதது இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. தமிழக அரசுதிருக்கோயில்கள் பராமரிப்பில் தன் கவனத்தை öசுலுத்தி வருகிறது. அறநிலையத்துறை ஆணையரும் முழு முயற்சிகள் எடுத்து வருகிறார். ஆனால், குமரி மாவட்டத்தில்கோயில்களின் நிலையோ மிகவும் பரிதாபமாக உள்ளது. அதிக வாய்ப்புகள் இருந்தும், வருவாயை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள திருக்கோயில் நிர்வாகம் தயாராக இல்லை.கோயில் ஊழியர்களின் நலனிலும் அக்கரையற்ற நிலையே தொடர்கிறது. ரும்பாலானகோயில்களில் அர்ச்சுகர்கள் இல்லாத நிலை; இருக்கும் அர்ச்சுகர்கள் கூட என்.எம்.ஆர்., அடிப்படையில் உள்ளனர். இதுபோல சுமார் 150 பணியாளர்கள் தினக்கூலி, என்.எம்.ஆர்., அடிப்படையில் பணி öசுய்கின்றனர். பத்து ஆண்டுகளுக்கும்மேலாக இதேநிலையில் பணி öசுய்யும் பணியாளர்கள் விரக்தியில் உள்ளனர். அவர்களுக்கு தினமும் 40 ரூபாய் மட்டுமே வழங்குகின்றனர். நிரந்தர பணியாளர்களுக்கும் நியாயமான ஊதியம் இல்லை. இருப்பினும் கடந்த காலங்களை ஒப்பிடும்போது, ஊதிய உயர்வு ஏற்பட்டுள்ளது. தினக்கூலி, என்.எம்.ஆர்., பணியாளர்களை உடனடியாக நிரந்தரம் öசுய்ய துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். அனைத்துகோயில்களிலும் நிரந்தர அர்ச்சுகர்கள் உட்பட பணியாளர்களை நியமிக்கவேண்டும். அரசின் மானியம் மூன்றுகோடியாக உயர்த்தப்படும் என்றும், அவ்வாறு வழங்கும் பட்சுத்தில் அனைத்து பணியாளர்களும் நிரந்தரமாக்கப்படுவர் எனவும் கூறப்பட்டது. ஆனால், காலம் கடத்தப்பட்டு வருகிறது. எனவே, மாவட்ட திருக்கோயில்களின் நிலைமையை கருத்தில் கொண்டு, அரசுஅவசுர நடவடிக்கைமேற்கொள்ளவேண்டும். மானியத்தொகையை உடனே உயர்த்தி வழங்குவதோடு, நிர்வாகத்தின் öசுயல்பாடுகள் திருப்திகரமாக அமைய அறங்காவலர் குழு அமைப்பதோடு, அனைத்து திருக்கோயில்களிலும் பக்தர்களை கொண்டு கமிட்டி அமைத்து மாவட்ட அளவில் நிர்வாக்குழு அமைக்கவும் நடவடிக்கைவேண்டும். இவ்வாறு ராமச்சுந்திரன் கூறினார். ஊழியர்களின் பல ஆண்டு கால காத்திருப்பிற்கு, அரசுநல்ல முடிவை வழங்கும் என நம்பியோடு இருக்கும் ஊழியர்களின் எண்ணம் நிறைவேற்றப்படவேண்டும் என்பதே பக்தர்களின் விருப்பமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !