முடியனூர் கோவிலில் தீபத் திருவிழா
ADDED :4350 days ago
தியாகதுருகம்: முடியனூர் ஆதிஅருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா துவங்கியது.தியாகதுருகம் அடுத்த முடியனூரில் நூற்றாண்டு பழமையான ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா துவங்கியுள்ளது. நேற்று முன்தினம் மூலவர் சுவாமிக்கு அபிஷேக அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகளுடன் திருவிழா துவக்கப்பட்டது. தினமும் சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடக்கிறது. வரும் 17ம் தேதி தீபத் திருவிழாவை முன்னிட்டு காலை பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை கோபுர விமானத்தில் மகாதீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்படுகிறது. இரவு உற்சவர் சுவாமி திருவீதியுலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.