உளுந்தூர்பேட்டையில் மகா கும்பாபிஷேகம்
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியிலுள்ள வரசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.இதையொட்டி கடந்த 12ம் தேதி காலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு யாக சாலை பூஜை ஆரம்பம், தீபாராதனை, மாலை 6 மணிக்கு யாக சாலை பூஜை ஆரம்பம், சுமங்கலி பூஜை நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு யாக சாலை பூஜை, 10 மணிக்கு விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகத்திற்கும், காலை 10.10 மணிக்கு மூலஸ்தானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. 10.15 மணிக்கு வரசக்தி விநாயகருக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 6 மணிக்கு ஸ்ரீவரசக்தி விநாயகர் மகா அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. இரவு 9 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.கும்பாபிஷேகத்தில் பேரூராட்சி தலைவர் ஜெய்சங்கர் மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கண்ணன், சிவசண்முகம் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.