உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்தச்சோறு சாப்பிட்ட பக்தர்கள்!

கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்தச்சோறு சாப்பிட்ட பக்தர்கள்!

பாப்பிரெட்டிப்பட்டி: கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில், நீண்ட வரிசையில் நின்று, பெண் பக்தர்கள், ரத்தச்சோறு சாப்பிட்டனர். பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சாமியாபுரம் கூட்டுரோடு அருகே கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு, ஒருமுறை ஐப்பசி மாத்தில், இங்கு வெகுவிமரிசையாக திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு திருவிழா, நேற்று கொண்டாடப்பட்டது. காலையில் அரவாண் தலை ஏறுதல் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து, அரவாண் சாமந்தி பூ அலங்காரத்தில், பக்கதர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து, மாலை அரவாண் தலை எடுக்கும் நிகழ்ச்சியும், ஆடு பலி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் கோவில் பூசாரி ஆட்டுக்குட்டியை கடித்து பலி கொடுத்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு ரத்தச்சோறு வழங்கப்பட்டது. இங்கு பிரசாதமாக வழங்கப்படும் ரத்தச்சோற்றை சாப்பிட்டால், குழந்தை இல்லாத பெண்களுக்கு, குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால், நீண்ட வரிசையில் நின்று, ஏராளமான பெண்கள் ரத்தச்சோற்றை பிரசாதமாக வாங்கி உண்டனர். விழாவில், அமைச்சர் பழனியப்பன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், மஞ்சவாடி, கோம்பூர் உள்ளிட்ட, 18 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !