சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :4350 days ago
மண்ணச்சநல்லூர்: தாலுகா பூனாம்பாளையம் அழகுநகரில், புதிதாக கட்டப்பட்ட சித்தி விநாயகர் கோவிலில், மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த, 13ம் தேதி பக்தர்களால் கொள்ளிடம் ஆற்றிலிருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அன்று மாலை மங்கள கணபதி வழிபாடு, பூர்ணாஹுதி நடந்தது. 14ம் தேதி காலை விக்ன கணபதி வழிபாடும், யாத்ரா தானமும் நடந்தது. காலை, 8.25 மணிக்கு, கோவில் விமானத்துக்கு புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடந்தது.