மகாதேவ அஷ்டமி விழாவை முன்னிட்டு உஞ்சவிருத்தி பஜனை
ADDED :4349 days ago
திருநெல்வேலி: மகாதேவ அஷ்டமி விழாவை முன்னிட்டு நெல்லை சி.என்.கிராமத்தில் உஞ்சவிருத்தி பஜனை நடந்தது.நெல்லை ஜங்ஷன் சிருங்கேரி சாரதா கல்யாண மண்டபத்தில் வரும் 25ம் தேதி மகாதேவ அஷ்டமி பூஜை விழா நடக்கிறது. இதை முன்னிட்டு ருத்ர ஏகாதசி மற்றும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் அன்று நடைபெறவுள்ளது. இதற்காக உஞ்சவிருத்தி பஜனைகள் ஞாயிற்றுக் கிழமைகளில் நடந்துவருகிறது. சி.என்.கிராமத்தில் நடந்த உஞ்சவிருத்தி பஜனையில் பாகவதர்கள் பஜனைப் பாடல்களை பாடி சென்றனர். வரும் 17ம் தேதி ஜங்ஷன் பகுதியிலும், 24ம் தேதி மதுரை ரோடு சாரதா எஸ்டேட் பகுதியிலும் உஞ்சவிருத்தி பஜனை நடக்கிறது.