உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலப்பாளையம் ரிபாஈ தைக்காவில் 923வது கந்தூரி விழா துவக்கம்

மேலப்பாளையம் ரிபாஈ தைக்காவில் 923வது கந்தூரி விழா துவக்கம்

திருநெல்வேலி: மேலப்பாளையம் ரிபாஈ தைக்காவில் 923வது கந்தூரி விழா இன்று துவங்குகிறது. தென்னிந்திய ரிபாஈ தரிகாவின் தலைமை பீடமான மேலப்பாளையத்தில் ரிபாஈ தைக்காவில் கந்தூரி விழா மிகவும் சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ரிபாஈ நாயகம் பிறந்த 923வது கந்தூரி விழா இன்று (15ம் தேதி), நாளை (16ம் தேதி) களில் நடக்கிறது. இன்று இரவு 9 மணி முதல் 1 மணி வரை வஸீலா அரபி பைத்துக்கள் ஓதப்படுகிறது. நாளை காலை 9 மணிக்கு ரிபாஈ சற்குருவின் 50ம் ஆண்டு பொன்விழா நடக்கிறது. விழாவிற்கு அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி தலைவர் பொறியாளர் செய்யது அகம்மது தலைமை வகிக்கிறார். ரிபாஈ தைக்கா முத்தவல்லி வெள்ளை கலீபா அகம்மது, வெள்ளை கலீபா செய்யது பொவுஸ்தார், பகுதி அதிமுக செயலாளர் ஹயாத், மண்டல சேர்மன் ஹைதர்அலி முன்னிலை வகிக்கின்றனர். முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் புலவர் சாகுல்ஹமீது வரவேற்கிறார். தாயிரா இசைக்கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் நலவாரிய அட்டையை மேயர் விஜிலா சத்தியானந்த் வழங்குகிறார். 50ம் ஆண்டு பொன்விழா மை தபால் தலையை துணை மேயர் ஜெகநாதன் வெளியிடுகிறார். ஆரிப் நாயகம் அற்புத மாலை என்ற புதிய நூலை முன்னாள் எம்.எல்.ஏ., கோதர் மைதீன் வெளியிட, முதல் பிரதியை எல்.கே.எஸ்.மீரான் முகைதீன் பெற்றுக் கொள்கிறார். வி.எஸ்.டி.அமானுல்லா, கலைமாமணி சின்னப்பா, லயன் ஷாஜகான், குமாரவேல் வாழ்த்துரை வழங்குகின்றனர். நாளை (16ம் தேதி) மாலை நேமித கொடி, சந்தன குடம் ஆகியவை தைக்காவில் பக்தர்கள் செலுத்துகின்றனர். இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை விழா நடக்கிறது. விழாவில் தென் இந்திய ரிபாஈ தரிகாவின் தலைவர் சற்குரு முகம்மது புகாரி அலிஷா கலீபா ஐதுரூஸ் ரிபாஈ தலைமை வகிக்கிறார். விழாவில் இறை தியானம், பக்தி சொற்பொழிவுகள் நடக்கிறது. அதிகாலை 4 மணிக்கு 11ம் நூற்றாண்டில் உள்ள ரிபாஈ நாயகத்தின் ஆதி பரம்பரை தொடர் வழி து ஆ ஓதி பக்தர்களுக்கு நேர்ச்சை வழங்கப்படுகிறது.ஏற்பாடுகளை தைக்கா உதவிச் செயலாளர் கவிஞர் செய்யது அலி ரிபாஈ மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !