சீர்காழி சித்திபுத்தி விநாயகர் கோவிலில் ஸம்வத்ஸரா அபிஷேகம்!
ADDED :4347 days ago
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே புகழ் பெற்ற சித்தி புத்தி சகித கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு நடைபெற்றது. முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று 2 கால யாக பூஜைகள் நடத் தப்பட்டு சித்திபுத்தி ஸகித கற்பக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை நடந்தது. ராமு குருக்கள் தலைமையிலானோர் பூஜைகளை நடத்தி வைத்தனர். இவ்விழாவில் தொழிலதிபர் வரதராஜன், பொறியாளர் நாராயணன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் கோவில் சார்பில் பிராசம் வழங்கப்பட்டது.