சபரிமலையில் தற்காலிக தபால் நிலையம்!
ADDED :4347 days ago
சபரிமலை: சபரிமலையில் நேற்று நடை திறக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர். இவர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் போர்டு செய்து வருகிறது. இந்த வகையில், பக்தர்களின் வசதிக்காக மண்டல, மகரவிளக்கு காலங்களில் தற்காலிக தபால் நிலையம் இயங்க உள்ளது. இந்த தபால் நிலையம் நாளை முதல் செயல்பட துவங்கும். ஜனவரி 19ம் தேதி வரை இயங்கும். இங்கு, ஸ்பீட்போஸ்ட் உள்ளிட்ட சேவைகள் கிடைக்கும்.